நலமான வாழ்வின் பக்கம்

நலமான வாழ்வின் பக்கம்

நாம் காலை உணவை தவிர்த்தால் வரும் தீமைகளை பார்போம்

 

சர்க்கரை வியாதி :

காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு , இன்சுலின் சுரப்பதில் பாதிப்புகள் உண்டாகி, சர்க்கரை வியாதி உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

பலதரப்பட்ட நோய்கள் :

காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு உடல் பருமன், ரத்த அழுத்தம், இவை மெல்ல உருவாகி இதனல் இதயத்தின் செயல்கள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

காலை உணவு :

ஒரு நாள் உழைக்க தேவையான எனர்ஜி மற்றும் செல்களுக்கு தேவையான சத்துக்கள் காலை உணவிலிருந்தே பெறப்படுகின்றன. ஆகவே காலை உணவை எக்காரண கொண்டு தவிர்ப்பது மிகவும் தவறு.

நோய் எதிர்ப்புச் சக்தியளிக்கும் வெங்காயம்

 

வெங்காயத்தில் ஆன்டி – பாக்டீரியஸ் மற்றும்

நோய் எதிர்ப்பு அழற்சிப் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால்இ

அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள்‚ வைட்டமின்கள் உப்புக்கள்‚ உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்தைத் தருகிறது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்இ இழந்த சக்தியை மீட்கும்.

சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தில் வைட்டமீன் சீ‚ புரதச்சத்து உள்ளதால் நம் உடம்பில் இருக்கும் கொளஸ்ரோலின் அளவை குறைக்கும்.

உயர் குருதி அழுத்தத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறை

 

கொழுப்பு குறைந்த அதிலும் நிறம்பிய கொழுப்புகள் குறைந்த உணவுகளை உண்ணுதல்.

உப்பு குறைந்த உணவுகளை உண்ணுதல் உப்பின் அளவு ஒரு நாள் உணவில் 6 கிராமை விட அதிகரிக்கக்கூடாது.

உடற்பயிற்சி ஒவ்வொருநாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும் (உடற்பயிற்சிக்காக 30 நிமிடங்கள் நடப்பது கூட போதுமானது) குறைந்தது வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

உணவில் பழங்களையும் மரக்கறிவகைகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ளல்.

உணவில் மீன்களை அதிகம் சேர்த்துக்கொள்ளல்.

 

மீனில் டீ விட்டமீன்‚ அயோடின் போன்ற நிரய சத்துக்கள் இருப்பதால் டென்மார்க் உணவு நிர்வாகம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இரண்டு முக்கிய உளவு நேரத்தில் மீனை சேர்த்துக் கொல்லவும் மற்றும் அதைவிட சில நேரம் மதிய உணவிற்கும் மீனை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

(வுரகெளைஉh) போன்ற மீன்களில் அநசஉரசல அதிக அளவில் காணப்படுதால் 3 வயதில் இருந்து 14 வயது வரை இருக்கும் பிள்ளைகள் இதை தவிர்பது நல்லத என்பதை டென்மார்க் உணவு நிர்வாகம் கூறியிருக்கின்றார்கள்.

ஆநசஉரசல உள்ள மீன்களை சாப்பிடுவதால் பிள்ளைகளின் மூலை வளர்ச்சியை பாதிக்கும்.

அதனால் 3 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த மீன்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

 

 

அசைவ உணவுகளில் அதிகம் நன்மை தருவது மீன். உணவில் அடிக்கடி மீனைச் சேர்த்து வந்தால் எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிக புரதச் சத்துள்ள மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்படாது.

கண் பார்வைக்கும் மீன் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

தொடர்ந்து மீன் சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் குறையும்

ஞாபகசக்தித் திறன் குறைபாடு நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.

இதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பைத் தருகிறது மீன் உணவு. மீன் எண்ணெயைச் சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவு குறையும்.

 

கனவாய் மீனுக்கு மிகப் பெரிய இதயம் உள்ளது. உண்மையில் இதற்கு ஒரு இதயம் அல்ல மூன்று இதயங்கள் உண்டு.

பற்கள்

மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.

 

பல் சொத்தை

பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது.

பற்களைப் பாதுகாக்க செய்யவேண்டியவை

சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்

தூங்க செல்வதற்கு முன்பு பல் துலக்கவேண்டும்

புகைத்தல், மது அருந்துதல் கூடாது.

போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.

உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும்.

ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை கடித்து சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவில் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

 

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்

கோலன் அலர்யி என்பது பூக்களில் இருக்கும் மகரந்தங்களினால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனையாகும்.

இந்த அலர்யி 5 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகும்.

இந்த போலன் அலர்யி என்பது மகரந்தத்திற்குல் இருக்கும் புரோத்தீன்னால் எற்படுகின்றது.

 

போலன் அலர்யி உள்ளவர்களிற்கு தேவையான சில ஆலோசனைகள்.

காலையிலும் மாலையிலும் தான் போலன் அதாவது மகரந்தம் காற்றில் இருப்பது குறைவு.

அதனால் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீடுகள் காற்றோட்டமாக இருக்க சிறிது நேரம் யன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.

 

போலன் உங்களுடைய ஆடைகளிள் வருவதை தவிர்ப்பதற்கு போலன் வரும் சீசனில் தோய்த்த ஆடைகளை வெளியில் காயவிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆடைகளை உலர்த்தும் மிசினை பாவிப்பது நல்லது.

 

கிழமையில் ஒரு தடவை வீடு முழுவதும் சுத்தம் செய்தல் வேண்டும்.

 

காலநிலைகள் மாறும் போதும்‚ அதி வெப்பம் வரும் போதும் அதிகமாக போலன் காணப்படும்.

மழைநேரங்களில் போலன் குறைவாக காணப்படும்